பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ: (யோசிப்பதுபோல பாசாங்கு செய்து) என்னா பிரதர்! ஒரே அடியா, என்னை முட்டாளாக்குறீங்க, நீங்க நம்ம பக்கத்து வீட்டு பாக்கியம் ............ வா : எந்தப் பாக்கியம்? ஆ: அவதான், தனபாக்கியம். அவ வீட்டுக்கு வந்திருக் கறிங்களே, நீங்கத்தான். ஒரேயடியா மறைக்கறிங்களே. நான் பார்த்திருக்கறேன். வா : இல்லைங்க. நான் வந்ததில்லைங்களே. சும்மா, வாங்க. கூச்சப்படாமே. யாரு பார்க்கறாங்க இங்கே. வாங்க. (வேதம் வீட்டு வாசற்படி வருகின்றனர் இருவரும். உள்ளே அழைத்துச் செல்கிறாள். பழைய நாற்காலியிலே உட்கார வைக்கிறார்கள் வாலிபனை.] வா : இந்த மாதிரி வழக்கமே எனக்குக் கிடையாது. என்னமோ இன்னக்கி மனசு மாதிரியா இருந்துது. அதனாலே...... வே: (வாலிபன் பக்கத்தில் நின்றுகொண்டு) இது சகஜந் தானுங்களே ! என்னமோ கதைக்கூடச் சொல்வாங்க இல்லே, அப்பேர்க்கொத்த விசுவாமித்ரர்கூட ஒரு மேனகையைப் பார்த்து மயங்கினாருன்னு. ஊரிலே நடக்காத விஷயமா? இங்கே நம்ம வீட்டிலே, கண்டவங்க நுழையறது கிடையாதுங்க. ஆ: தப்பித்தவறி எவனாவது வந்தா, இவ எறிஞ்சி விழுவர். இப்ப, உங்ககிட்ட சிரிச்சிப் பேசினா பாருங்கோ, இந்தமாதிரி இருக்கவே மாட்டா. அது என்னமோ உங்களைக் கண்டதும்..... வா: அதெல்லாம் நம்ம பேஸ்கட், பர்சனாலடி........ வே: (ஆறுமுகத்தைப் பார்த்து) போங்க! உங்களுக்கு எப்பவும் கேலிதான். (வாலிபனைப் பார்த்து) எனக்கு மனசு பிடிச்சாத்தான், முகங்கொடுத்துப் பேசற வழக்கமங்க. அவன் மகாராஜனாக்கூட இருக்கட்டுங்க, நமக்கு என்னாங்க. பணமா பெரிசு! மனசுதானுங்களே. வர்: ஆமாம் ! எனக்கு நானு இப்படிப்பட்ட இடத்திலே வந்து பழக்கமில்லாதவன்.

86

86