பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 42 இடம் :--- வேதம் வீடு. இருப்போர்:--வேதம், ஆறுமுகம். (பிறகு) ஒரு வாலிபன். [வாசற்படியில் நின்றுகொண்டிருக்கிறாள். வேதம் விசாரத்துடன் ; கலைந்த பொட்டு, வாடிப்போன சரிந்த ஆடை, சுழலும் கண்ணுடன், பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு சிகரெட் பிடிக்கிறான், அவளுடைய ஆசை நாயகன்' ஆறுமுகம்.] ஏ! வேதம்! உன் மூஞ்சி இருக்கிற அழகுக்கு முக்கா ரூபா கொடுப்பானாடி எவனாச்சும். முகரக்கட்டையைப் பாரு. போய்ப் படுடி, இன்னக்கி எவனும் சிக்கமாட்டான். வே: அட, என் மன்மதக் குரங்கே! நீ கெட்டகேட்டுக்கு கேலி வேறேயா? நீ போய்ப்படு, பக்கத்திலே நீ தடியனாட்டம் இருந்தா, எவன் நுழைவான் ; உன்னை ஒரு பெரியப் பிரபுன்னு நினைச்சிகிட்டுப் போயிடுவான்க. உனக்கென்ன வந்தது கவலை. வீட்டுக்காரிக்கு வாடகைப் பணம் 9 ரூபா தரணும், வாயிலே. வந்தபடி பேசறா, மானம் போவுது. ஆ: (கேலிச் சிரிப்புடன்) மானம் போகுதா? உனக்கா! ஏ அப்பா! மானம்னா, மணங்கு என்ன விலைன்னு கேட்கறவ நீ. மானம் போவுதா உனக்கு. என்னாடி வேதம். அதெல்லாம் என் கிட்டவே காட்டறே. வே: காட்டறேன், நீ நோட்டு நோட்டா நீட்டுவேன்னு. [வீதியிலே யாரோ வருவதைப் பார்த்து] வாயை மூடு! அதோ எவனோ வருகிறான், பார்த்துக்கொள்ளு. [பாதை ஓரம் செல்கிறான் ஆறுமுகம். எதிரே வரும் வாலிபனைப் பார்த்து] ஏன் சார், டயம் என்னாங்க? வா: தெரியாதுங்களே, கடியாரம் இல்லை. எங்கேயோ உங்களைப் பார்த்த மாதிரியா இருக்கே? வா: என்னையா? ஊஹும் இருக்காதே.

85

85