பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றக் குடியன்: யாரோ புதிசு! வாங்க பிரதர்! வாங்க! என்னா பிரதர் கோவிக்கறே. [ரத்தினத்தின் முகவாய்க்கட்டையைத் தொட, அவன், அவனுடைய கைப்பிடித்துத் தள்ளு கிறான்.) சும்மா, இப்படித் தமாஷா ! பொழுது போக்க இன்னோர் குடி: உட்காரு பிரதர்,ஒரு கை. சே: இல்லை ! நாங்க இங்கே ஒரு சினேகிதரைத் தேடிக் கொண்டு வந்தோம்... முதல் குடி: அப்ப, நாங்களெல்லாம் சிநேகிதரு இல்லையா, பிரதர்! உட்காரு பிரதர், (கிளாசைக் காட்டி) ஜின் பிரதர் ! ஜின்! வேறு குடி: விஸ்கி வேணுமா பிரதர். GF: வேண்டாம். (ரத்னம் வாங்கி மளமளவென்று குடித்து விட்டு.) இப்படி, ரோந்து இங்கே காணோம், வாங்க. அவன், போயிருப்பான். சே: ரோந்து என்றால் ? அது உங்களுக்குப் புரியாத பாஷை. அவன் பெரிய பொம்பளைப் பைத்யம் பிடிச்சவனல்லவா? அந்தத் தெருவா போயிருப்பான். (இருவரும் போகின்றனர்.] முதல் குடி: வெறும் கையை முழம் போடற பயலுக. வேறு குடி: டே ! ஒரு சமயம் போலீசா இருக்குமோ! முதல் குடி: அடச் சே! ஏண்டா பயப்படறே! ஆடுடா! (இன்னொருவனைப் பார்த்து கிளாசைக் காட்டி) போடுடா.

84

84