பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சே: எங்காவது ஆடிக்கொண்டு கிடப்பான். ர: அப்படியானால் வா சேகர்! இங்கே ஒரு சூதாடுமிடம் இருக்கிறது. குடி, கூத்தி சகலமும். போய்ப் பார்ப்போம். [போகின்றனர். காட்சி 41 டம்:--சூதாடும் இடம். இருப்போர்:-பலர். (சூதாடும் இடத்தில் குடிவெறியுடன் பலர், சிலர் சீட்டாடுகின்றனர். சில பெண்களும் இருக் கின்றனர். கல்கமும் கூச்சலும் இடையிடையே பெண்கள் சிரிப்பு.] ஒரு குடியன்: (ஒரு பெண்ணைப் பார்த்து) ஷோக்கா ஒரு பாட்டுப் பாடுடீ ! கேட்டுகிட்டே ஆடலாம். மற்றோர் குடி: செ! வேண்டாண்டா!. அவ பாடினா சீட்டு ஆட்டத்து மேலே புத்திபோவாது. முதல் குடி: பாடுடி,பாடுடின்னா பாடணும். [பாட ஆரம்பிக்கிறாள்.) மற்ற குடி: ஏ! நிறுத்துடி, பாடக்கூடாது. முதல் குடி? பாடு. மற்ற குடி: பாடாதே! முதல் குடி: நீ யாருடா தடுக்க ? [என்று கேட்டுக்கொண்டே திரும்பிப் பார்க்க சேகரும் ரத்னமும் வரக்கண்டு.) டே! யாருடா நீ? நாங்களா? ஏன் சொல்லவேணுமா?

83

83