பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே: செச்சே! எவ்வளவோ பாபம் செய்து இந்த ஜென்மம் எடுத்தாச்சி. இன்னம் கொஞ்சம் மூட்டை சேர வேணுமா? பெரிய தொல்லையாப் போச்சி. வேதம்! எனக்குப் பாவம் பிடிச்சுக்கொள்ளும்னு ஒண்ணும் பயமில்லை. ஆனா இந்தப் பயலுடைய வீட்டிலே போலீசுலே தகவல் கொடுத்தா நம்ம பாடு ஆபத்தாயிடுமேன்னு பயமாத்தான் இருக்கு. சப்-இன்ஸ்பெக்டர் இந்தமாதிரி விஷயத்திலே ரொம்பக் கண்டிப்பானவராம். வே: (பயந்து) நமக்கு வேணவேவேணாம் இந்தச் சங்கடம். எழுந்து போகச்சொல்லு. ஆ: இதுக்கு நான் என்ன தூது? நீயேதான் போகச் சொல்லேன். வே: நான் போயிச் சொன்னா அவன் குழந்தை மாதிரி அழுதுவிடுவான் போலிருக்கு. அவ்வளவு பயித்யக்காரப் பிள்ளேயாயிருக்கு. [ஆறுமுகம் செயினை எடுத்துக்கொண்டு உள்ளே போகிறான் ] ஏ, அப்பேன் ! இப்படி வா வெளியே. வா : யாரை என்னையா? ஆ: ஆமாம் சார், செயின் மாஸ்டர் உங்களைத்தான், வா : (எழுந்து வருகிறான்) ஏன்? ஆ: (செயினை அவனிடம் கொடுத்து) இந்தா! மரியாதையா வீட்டுக்குப் போயி சங்கிலியைக் கொடுத்துவிடு. இப்படித் தலைகால் தெரியாமெ ஆடறது, வீட்டுச் சொத்தைத் திருடறது. வயத்துக் கொடுமையாலே, யாராவது வாங்கிக்கிட்டா பிறகு போலீசிலே கம்பெளியிண்டு கொடுக்கறது.. தடியனாட்டமா இருக்கறயே உனக்குப் புத்தி இல்லே! வீட்டிலே இருந்து நகைநட்டு திருடிக்கொண்டர் வர்ரது. ஆளைப் பார்த்தா ஒழுங்காகத்தான் இருக்கிறே. ஏதாவது அரை காலு இருக்கா பாரு மடியிலே. வா : (வெட்கமும் பயமும் மேலிட்டு) இல்லிங்க. ஆ: சுத்த வறட்டுப் பய. போடா, போ. பெரிய பிரபுமாதிரி வந்துவிட்டான், இந்த நேரத்திலே. 12

89.

89