பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ: (யோசித்து) ஜெமீன்தாரனா? ஆள் எப்படி இருப்பான்? இந்த நேரத்திலே எப்படி அண்ணேன் கண்டுபிடிக்கறது. இங்கே வருகிறவன் அத்தனை பேருந்தான் ஜெமீன் தாரன் மிட்டாதாரன்னு சொல்லிக்கிறான். நாம் கண்டமா, அவனெல்லாம் நிஜமாகவே ஜெமீன்தாரன்தானான்னு. இந்த ஜெமீன்தாரன் கொஞ்சம் வயசானவன். மீசைக்குச் சாயம் பூசியிருப்பான். கையிலே தங்கப் போட்ட தடி இருக்கும். குடிச்சிவிட்டு இருப்பான். பூண் (உள்பக்கம் பார்த்து) வேதம்! தா, வேதம்! வேதம் வருகிறாள். ரத்னத்தைக் கண்டதும் மரியாதையாக.] வே: ஏண்ணேன், தெருவிலேயே நிற்கறே. உள்ளே வாண்ணேன். வேதம்! மூணாவது வீட்டிலே ஒரு ஆசாமி வந்தானே இன்னக்கி கொஞ்சம் வயசானவனா தங்கப் பூண்போட்ட தடி கூட வைச்சிருந்தானே. வே: ஆமாம்! ஆ: அவன் ஜெமீன்தாரனா? வே: அப்பிடின்னுதான் சொல்லிக்கிறா அவ. ஆ: சரி போயி.. வே: இருக்கானான்னு பார்க்கச் சொல்றயா? அவன் போயி எவ்வளவு நேரமாச்சு. வெறுங் கையோடு வந்தானாம், அவ இலேசுப்பட்டவளா? வெள்ளிக்கிழமை விரதம்னு சொல்லி வெளியே அனுப்பிவிட்டா. (ஆறுமுகம் யோசிக்கிறான்.] ர: டே! ஆறுமுகம்! நானும் இவரும் போய்த் தேடிப் பிடிக்கறோம். நீ, நம்ம வீட்டுக்குப் போ. அம்மாவுக்குக் காச்சல். போறேன், இதோ. (டாக்டர் சேகரும் ரத்னமும், அந்த இடத்தை விட்டுப் போகின்றனர்.

91

91