பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெ சீ, பிச்சைக்காரக் கழுதே! ஒரு ரூபாதானா பிரமாதம். [பணம் தருகிறான். முந்தானையில் அதை முடிபோடுகிறாள், அதற்குள். ஜெகவீரன் பதைத்து அவள் தோள்மீது கை போட] அவள்: அட, இரய்யா. ஜெ: (குளறலும் கொஞ்சலுமாக) ஒன் பேரு என்ன? அவள்: (வெறுப்பாக)ஆமாம்! அதை நீ கட்டயமாகத் தெரிஞ்சிக்க வேணுமா. ஜெ: (அதே குரலில்) சொல்லும்மா, கண்ணில்லே, சந் தோஷமாப் பேசேன். சள்சள்ளுனு விழறயே. [ஜெகவீரன் அவள் கையைப் பிடித்து இழுக்க, அவள் கூச்சலிட்டு ஐய்யய்யோ! யாருய்யா நீ ! அக்ரமம் செய்யறே! மரியா தையர் போய்விடு ! இல்லைன்னா மானத்தை வாங்கிவிடுவேன். [சேகரும்,ரத்னமும் வருகிறார்கள். அவள் ஓடிவிடுகிறாள். ஜெமீன்தார் திகைத்து நிற்கிறார். சேகர், ஜெமீன்தாரை அடையாளம் கண்டுபிடித்து விட்டு) சே: ஜெமீன்தாரரேதான்! (கேலியாக) ஐயா தெருவிலே படுத்துக்கிடக்கறவளைக் கூட விடமாட்டார் போலிருக்கு. ஜெ : (தடியை ஓங்கி யாருடா நீ. {ரத்னம் தடியைப் பிடுங்கிக்கொண்டு டாக்டர்! நமக்கு ரொம்ப நாளா ஆசை, இதைப்போல, தங்கப் பூண்போட்ட தடிமேலே. ஜெ : யாரது ? சேகரா? டாக்டரா? சே: ஆமாம்! உங்களை எங்கெங்கே கண்டு தேடறது. வீட்டிலே, சுசீலா வீட்டிலே, கிளப்பிலே, எங்கே எல்லாம் தேடினோம். ஜெ நான் இப்படிப் பொழுது போக்காக

95

95