பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3 இப்பல்கலைக்கழகம் தொடங்கி ஓராண்டே ஆகிறது. இதுவே முதல் பட்டமளிப்பு விழாப் பேருரையாகும். இந்த வாய்ப்பு நான் பெற்றிடச் செய்த பல்கலைக்கழகப் பெரியோர் சளுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள் கின்றேன். நான் மாடக்கூடலில் நிற்கின்றேன். நானிலம் போற் றிடும் தனிச்சிறப்பினைப் பெற்றுத் தமிழகத்தின் அறிவுக் கோட்டமாய்த் திகழும் மதுரையம்பதியில் எழுச்சி பொங் கிடும் நிலையில் நிற்கின்றேன். இங்கு நின்றிடும் எவருக்கும் அன்ருெருநாள் அறிவாளர் அரணளிக்க அரசாண்ட பாண்டியப் பெஐமன்னர் . மிழ் வளர்த்துத் தமிழர் தம் தனிச் சிறப்பினைக் காத்துப் புகழ்க் கொடி நாட்டித் தரணிமெச்சக் கோலோச்சி வந்த வரலாற்று நினைவு எழாமலிருக்க இயலாது. நெஞ்சு நெக்குருகும் நினைவலைகள் எழுத்தன் செய்யும். இன்று, நான் இங்கு நின்று, பட்டச்சிறப்புப் பெற்றிட வந்துள்ளோரையும் பெரும் பேராசிரியர்களேயும் கண்டு களித்திடுகின்றேன். இங்கன்ருே அந்நாளில் பாண்டியப் பேரரசர் சங்கப் புலவருடன் அளவளாவி அறிவுப் புனலாடி அகமகிழ்ந்திருந்தனர் என்பதனே எண்ணுகின்றேன். இன் பத்தேன் சுவை நுகர்கின்றேன். மனக்கண்ணுல் காணுகின்றேன் : முதுபெரும் புலவர் கள் அவைநோக்கி ; முந்நூறுகல் தொலேவினின்றும் மூதறிஞர் ; காணிர் தமிழ் நெறியை-தரணியோர் மெச்சி ஏற்றிடத் தக்கதோர் நன்னெறியை-ஈரடியில் யான் இயற்றியுள்ள சீரடியை என்றுரைத்த வண்ணம் திரு வள்ளுவர்ை வந்திடும் காட்சியின. தத்தமது ஏடுகளே வித்தகர் போற்றிடத்தக்கவென விளக்கிப் புலவர் பெருமக்கள் பேருரையாற்றிய பெரு மிதமிகு காட்சியெல்லாம் காணுகின்றேன். காணுத:ர் எவருமிரார்.