பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2மருத்துவத்தில் சிறந்த அறிவாளர்கள் இங்கே இருக்கிறார்கள். இருந்தாலும் கூட இங்கே தவிர்க்க முடியாத பிணிகளும் உண்டு.

நல்ல உற்பத்தியும் உண்டு. இருந்தாலுங்கூடப் பங்கீட்டு முறையும் இருக்கிறது.

இப்படி எதில் எடுத்தாலும் ‘இருந்தாலுங்கூட’ என்று சொல்லும் நிலையில் நாடு உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

விருப்பமான துறைகளில் ஈடுபடவிருக்கும், பட்டம் வெற்ற மாணவர்கள் தங்களது சமூகச் சேவையை எங்கிருந்தாலும் செய்ய வேண்டும் எனக்கேட்டுக் கொன்கிறேன்.

வகைப்பாடு : கல்வி- சமூகப்பணி.
[21-4-67 அன்று சென்னைச் சமூகப் பணிப் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை].


2. பல்கலைகழகம்
பறைசாற்ற வேண்டியவை

1

ஆளுநர் அவர்களே, இணை வேந்தர் அவர்களே, துணை வேந்தர் அவர்களே, பேராசிரியப் பெருமக்களே, இன்று பட்டம்பெற வந்துள்ள இளந்தோழர்களே.

மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரை நிகழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றமைக்குப் பேருவகை கொள்கின்றேன்.