பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7 ' ஆய்ந்தறிதல் வேண்டும் அதற்கேற்ற அஞ்சாமை வேண்டும். இன்றேல் சிந்தனையைச் சிறையிலிட்டுக் கொடுமை யினைக் கோலோச்சச் செய்வதற்கு உடந்தையாகிவிடுவோம்?? என்றுரைக்கின்றார், எச்சரித்திருக்கின்ருர் பெர்ட்ராண்இ ரசல் எனும் பெருமகனர். ஈராயிரம் ஆண்டுகட்கு மு ன் ன ர் இங்கமர்ந்திருந்த புலவோர்கள் கூறிச்சென் ருர்கன். இவை போன்ற ஏற்றமிகு நல்லுரைகள் பற்பலவற்றை. இடையில் அவை மறந்தோம், அல்லலுற்றோம். இன்று அவனியின் பிற பகுதியிலுள்ள ஆன்ருேர் அதனே அறிவிக்கின் ருர். நமக்குண்டு அந்தக் கருவூலம் நெடுங்காலமாக என்பதனை அறிகின் ருேம். நானிலம் இதனை அறியச் செய்திடும் தொண்டு புரிந்திட உறு தி கொள்கின் ருேம், பட்டம் பெற்றிடும் இத்திருநாள் உவகை பெற்றிடும் விழா நாள் ஐயமென்ன? ஆயினும், உவகை பெற்றிட மட்டுமே அமைந்ததன்று, உறுதிகொண்டிடவும் உள்ளதோர் நன்ள்ை நாட்டைக் காத்திடும் நல்ல பணிக்கு நம்மை நாமே ஒப் படைத்திருக்கின்ருேம் என்பதனை உணரும் நாளே இந்நாள். மதுரைப் பல்கலைக்கழகம் ஓராண்டுப் பருவத்தினிள்ளது. நூற்றாண்டு விழா நடத்தி முடித்திட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன, நம் நாட்டில். பத்தோடு பதினென்று என்னும் முறையினிலே அமைந்ததன்று மதுரைப் பல்கலைக்கழகம். தமிழரின் தனித்தேவை ஒன்றினைக் கருத்திற்கொண்டு துவக் கப்பட்டதாகும் மதுரைப் பல்கலைக்கழகம். நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டபோது, நாடு தன்னரசு இழந்து தலே கவிழ்ந்து இருந்தது. மக்கள் மனம் வெதும்பிக் கிடத்தனர். பல்வேறு துறைகளிலே சீர்குலைவு, எங்கும் அறியாமை மட்டுமன்று, இந்நாட்டினர் ஏதும் அறிந்திடவல்லர் அல்லர் என்னும்