பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

 எண்ணம் கப்பிக்கொண்டிருந்த நிலை. இங்கு எவரும் இதற்கு முன்னர் நினைத்துப் பார்க்கமுடியாத அறிவுக்கலைகளே மேனாட்டார் வகுத்தளிக்கின்றார் என்னும் உணர்வு மேலோங்கிய நிலையுடன் பல்கலைக்கழகம் நுழைந்தனர்.

அன்றைய நாட்களில் பயிற்சி தந்திட முனைந்தோரும் பரிதாப உணர்வுடனே பாடங் கற்பிக்க முற்பட்டனர். பிறநாட்டில் என்னென்ன கண்டனர் என்னும் வியப்புணர்ச்சிக்கே முதலிடம். நம்நாடு ஏதேது அறிந்திருந்தது என்பது பற்றிய கேள்விக்கு ஒதுக்கிடம்.

இந்நிலையில் வளர்ந்தன, பழம்பெரும் பல்கலைக் கழகங்கள். ஆண்டான், அடிமைக்கு அன்பு காரணமாக அறிவு வழங்கிடவும் வேலைக்கேற்ற ஆட்கள் பெற்றிடவும் அமைத் திட்ட இடங்கள் என்று அவை கருதப்பட்டன.

அவற்றினிலே பயிற்சி பெற்றுப் பட்டம் பெற்ற அறிவாளரில் மிகப் பலரும் நடையாலும் உடையாலும் நாட்டத் தாலும், தாம்பிறந்த நாட்டில் வாழுகின்ற வேற்று நாட்டு வடிவங்களாகத் தம்மை ஆக்கிக்கொண்டனர். அதிலே பெருமகிழ்வும் கண்டனர். நெடுங்காலம் இந்நிலை, இன்று அஃது பழங்கதை.

மதுரைப் பல்கலைக்கழகம் அடிமைத்தளே அறுத்து, ஆளுதற்கு உரிமையும் தகுதியும் பெற்றோம் நாம் என்னும் முழக்கமிட்டு விழித்தெழுந்த மக்கள் உலா வந்திடும் நாட்களிலே அமைந்துள்ளது.

"ஒளிபடைத்த கண்ணாய் வா! வா ! வா ! ?" என்னும் பாரதியின் வீர அழைப்பு கேட்டு அணி அணியாய் வீரர்கள் திரண்டு வந்தனர். பிறகு எழுந்தது இந்தப் பல்கலைக்கழகம்.

நாட்டுக்கு விடுதலை கிடைத்தது மட்டுமின்றி, மனத்தளைகள் மெல்ல மெல்ல அறுபட்டிடும் நிலையையும் நாம் கண்டோம். அந்தச் சூழ்நிலையிலேயே இப்பல்கலைக்கழகங்