பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9 கண்டோம். சிந்தனே நமதுரிமை என்னுங் குறிக்கோளுக் கான கோட்டம் இஃது என்பதனை உணர்கின்ருேம், 4. ‘' எல்லாம் பிற நாடுகளிலே உள நம் நாட்டிலே ஏதும் இல்லை." என்னும் பிச்சை மனப்பான்மை செத்தொழிந்து, ' எமக்கு ஈந்திடும் ??. என்று எந்தாட்டவரும் கேட்டுப் பெற்றிடத்தக்க ஏற்புடைய எண்ணக்குவியல் எம்மிடம் உண்டு. அது மாசுபடிந்த மணிபோல, மங்கியதோர் ஒவியம்போல உளது. மாசு துடைத்திடுவோம் மணி ஒளி யைக் காட்டிடுவோம் என்று எழுச்சியுடன் கூறத்தக்க விழிப் புணர்ச்சி மேலோங்கியுள்ள காலமிது. அதனைச் செவிலித் தாயாகப் பெற்றுள்ளது இம்மதலே-மதுரைப் பல்கலைக்கழகம். எனவே, இதற்கென்று ஒரு தனித்தன்மை இதற்காக ஒரு தனிப்பாதை இருத்தல் வேண்டும். இந்தப் பல்கலைக் கழகம் தமிழகத்துக் கருவூலந்தன்னை உலகு காணுதற்கான வழிவகுக்கும் கோட்டமாகிப் புலிபொறித்தான், கயல்பொறித் தான், ஆரியப்படை கடந்தான், கங்கைகொண்டான், கடாரம்வென்ருன் என்றெல்லாம் புல்லரிக்கும் வரலாற்றினைப் படிக்கின்ருேமே அதற்கொப்பக் குறளளித்தார், மேகலை ஒளி தந்தார், அகமும் புறமும் அறிவித்தார் என்று அவனியி லுள்ள நாடுகளில் வித் தகர் மெச்சிடத்தக்க பு:வரலாறு சமைத்திடுதல் வேண்டும். அதற்கேற்ற அணிவகுப்பைத் திரட்டிடுதல் இந்தப் பல்கலைக்கழகத்தின் தனித்திறய்ை அமைந்திடுதல் வேண்டும். பாடமுறை, பயிற்சி முறை தேர்வு முறை எல்லாமே, இந்தத் தனி நோக்கம் கொண் டிடுதல் மிக நன்று. உரியவர்கள் இவைபற்றி ஆய்ந்தறி தல் வேண்டும். விருப்பம் உரைக்கின்றேன் , வடிவம் கொடுத்திடும் பொறுப்பில் உன்ளோர் செய்திடுவர் எனும் ஆர்வங்கொண்டு. அச்சம் தவிர்த்தல், ஆய்ந்தறிதல், நாட்டுநிலை உயர்த் தல், பிறநாடுகட்கு நம் தனிச்செல்வம் ஈது எனக் காட்டிடல், அளித்திடல்-இவை எமது பணி என்று கூறிடுவீர். இந்த நில பெற்ருேம் என்பதனை அறிவிக்கும் சான்றுகளே, யாம் F-2