பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17


இன்று புறப்படும் படை அறிவுப்படை, இப்பல்கலைக் கழகத்தினின்றும் அமைந்து வெளிக்கிளம்பும் முதற்படை. இதனை வாழ்த்தி வரவேற்றுப் பாராட்டிச் சென்று வருக ! வென்று வருக.? எனக் கூறிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் நான் உள்ளபடி பெருமிதங் கொள்கிறேன்.

தமிழ் உமது முரசமாகட்டும். பண்பாடு உமது கவனமாகட்டும். அறிவு உமது படைக்கலனாகட்டும், அறநெறி உமது வழித்துணையாகட்டும். உறுதியுடன் செல்வீர். ஊக்கமுடன் பணிபுரிவீர். ஏற்றமிகு வெற்றியினை ஈட்டிஇவீர். பாட்டு மொழியுடைய நமது தாயகம் வாழத் தரணி காத்துணை நின்றிடும் தகுதிபெறச் சென்றிடுவீர், வென்றிடுவீர்.

வகைப்பாடு : கல்வி - பல்கலைக் கழகம்
[7-9-67]அன்று மதுரைப் பல்கலைக்
கழகத்தில் ஆற்றிய முதல் பட்டமளிப்பு
விழா உரை.]


3.பல்கலைக் கழகத்தின்
தலையாய பணி

1

வேந்தர் அவர்களே, இணை வேந்தர் அவர்களே, துணைவேந்தர் அவர்களே, ஆண்டின் பட்டதாரிகளே, நண்பர்களே.

F–3