பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23



3

ஆண்டின் பட்டதாரிகளே ! நீங்கள் எல்லாம் ஏக்கமற்ற எதிர்காலத்தைப் பெற விழைகின்றேன். ஏனெனில், ஒரு தனியாளின்-பட்டதாரியோ பட்டதாரி இல்லை.உடனடி நாட்டமெல்லாம் மதிப்பு மிக்க வாழ்க்கைக்குரிய வழிவகை யினைப் பெறுவதே. எல்லா மனிதச் செயலின் முனைப்பார்வமும், முதலார்வமும் அதுவே. ஒருவரும் அதைப் புறக்கணிக்க இயலாது. ஆனால், அது மட்டுமே தனிக்குறிக் கோளாக இருக்க இயலாது.

வெறுந்தனிப் பருவுலக முன்னேற்றத்தைக் காட்டிலும், உயர்ந்த செம்மார்ந்த ஒரு நிலையினை நாடு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. ஏனெனில் இப்பல்கலைக்கழகக் கல்வி என்பது நீங்கள் துய்த்து மகிழும் ஒருபேறு. அதற்காக நீங்கள் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு ஆழ்ந்த கடப்பாடுடையீர் !

உயர்கல்வி நிலையங்களைக் கட்டிக் காக்கத் தேவைப்படும் பணத்தின் பெரும்பகுதி நாட்டின் வாயிலாகச் சமுதாயத்திலிருந்து திரட்டப்படும் வருவாய்களிலிருந்து வருகிறது. அவ்வருவாயின் பெரும்பகுதி உழைப்போர் உழுவோரிடமிருந்தே வருகிறது. இவர்கள் நீங்கள் துய்க்கும் பேற்றினைப் பெறாதவர்கள் ; விருப்பப்பட்டே துன்பத்தினை ஏற்றவர்கள். ஆகவே, அடுத்த தலைமுறையினரை அவர்கள் நல்வாழ்வு வாழச் செய்பவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளே !"நீங்கள் எவ்வாறு அதனைத் திருப்பித் தரப் போகிறீர்கள் ? சமூகப் பேழையிலிருந்து நீங்கள் பெருமளவுக்கு எடுத்ததை ஈடுகட்டுவதற்குரிய உங்கள் பங்கென்ன"?என்று நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். மீண்டும் நீங்கள் அதனைச் செழிப்பு தரத்தக்க வகையில் நிரம்பாத வரையில், வரும் தலைமுறையினர் வெற்றுக் கரு ஆலத்தையே காண வேண்டி வரும் !