பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

 அந்த உயரிய பரம்பரையில் வந்தவர்கள் என்னும் முறையில் உங்களைச் சார்ந்துள்ள சூழ்நிலையினை வெல்லவும் உங்களால் இயன்ற அளவுக்குச் சமூகத் தொண்டாற்றவும் சிறந்த தகுதி உங்கட்குண்டு.

4

நன்மை செய்திட விரும்பும் எவரும் அவர்தம் வழியில் குறுக்கிடும் இடர்களை மக்கள் அகற்றுவார்கள் என எதிர் பார்க்க இயலாது. அவர்கள் அவ்வாறு விளைவித்தாலும், அவற்றின் அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளைத் தன் பட்டறிவினால் தெளிந்தறிந்து தேடும் வலிமையினலேயே, அவற்றை வெல்ல இயலும். ?? என ஆல்பர்ட் சுவைசர் கூறுகிறார்.

பன்னாடுகளிலுள்ள சிக்கல்கள் ஒரே தன்மையினவாயினும் நமது நாட்டுச் சிக்கல்களுக்குரிய சிறப்புத் தன்மை முனைப்பான இயல்புடையதாகும்.

நம்முடைய சிக்கல் கீறலிலிருந்து தொடங்கும் நிலமையன்று. அது அவ்வாறு இருக்குமாயின், அதற்குத் தேவைப்படுவது சீரிய முயற்சியே. நம்முடைய சிக்கல் உள்ளம் அரிக்கப்பட்ட ஒரு நிலைமையாகும். நாம் புதிய துறைகளைத் தேடும் பணியில் இல்லை. ஆனால் அவற்றிற்கு உரமிடும் பணியிலும் நீர்ப்பாய்ச்சும் பணியிலும் நாம் ஈடுப்பட வேண்டியவர்களாக உள்ளோம். நாம் நமது குறிக்கோள்களைத் தேட வில்லை. ஆனால் குறிக்கோள் பாளங்களை வகைப்படுத்துவதிலும் தொகைப்படுத்துவதிலும் சரிபார்ப்பதிலும் நாம் ஈடுபட்டுள்ளோம். இது சிக்கலான பணியேயாகும்.

பண்பாட்டில் குறைந்தவர்கள் அல்லர் நாம். ஆனால், காலம் என்னுஞ் சிலந்திக் கூட்டிலிருந்து நாம் அதனைத் துலக்க வேண்டியுள்ளது. கலப்படத்தை நீக்க வேண்டியுள்ளது. சுருங்கக் கூறுமிடத்து, நம்முடைய முழு எண்ணத்தினையும் நாம் சீர்படுத்த வேண்டும்; நம்மை நாமே மீண்டும் நாம் கண்டறிந்து கொள்ளவேண்டும், -