பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


27 ஒரு காலத்தில் உயர்ந்த ஒவ்வொன்றின் காவலராக நாமிருந்தோம், ஆல்ை, இன்று சிதைக்கும் நோய் நுண்ணங் களைப் பெருகவும் வளரவும் விட்டு விட்டோம். இன்றைய நமது பணி, புதிய காற்றையும் ஒளியையும் விட்டு, மூல வடிவத்தையும் உருவத்தையும் மீண்டும் சமைக்கவேண்டும். அதுவே தொலைநாடுகளில் நம்மை நன்கறியச் செய்வது. நம் இலக்கியம், கலே, சி. ற் ப ம் ஆகியவை மனித நுண்ணறிவின் நேர்த்தியான மாதிரிகன். ஆனல், அவை காலத்தின் குலைவுகளையும், ஓட்டங்கள் எதிரோட்டங்கள் ஆகியவற்றின் விளைவுகளையுங்கூடத் தாங்கியுள்ளன. அதனல் நாட்டின் புகழிகனயும் மேம்பாட்டினையும் அறிய, அயல்நாட்டு வரலாற்ருசிரியரையோ அறிஞரையோ நாம் நாட வேண்டிய நிலையில் உள்ளோம். அகவைக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆல்ை, மீண்டும் அது வலுவடையாதவரை சீரழிவுதான் விளையும். நம்முடைய பண்பாடும் நாகரிகமும் மிகப்பழமையானவை. ஆ ைல், அவற்றை உருக்குலையச் செய்யுமாறு வடுக்களையும் சுருக்கங் களையும் அனுமத்து விட்டோம். ஆகவே இன்றைய கடமை நம்முடையதை மீண்டுங் கண்டறிந்து, அதனைச் செப்பஞ் செய்வதாகும். ஏனேய நா டு எரி ன் ஏற்றங்களிலிருந்து வேண்டிய அளவுக்கு எடுத்து, அதனே வளப்பபடுத்த வேண்டும். நம்முடைய சிக்கல் எவ்வறிவுத் துறையிலும் புதிய ஏற்பாடு வேண்டுமென்பதன்று; எல்லாத் துறைகளிலும் நேர்த்தியான மாதிரிகளே நாம் கண்டுள்ளோம். நம்முடைய ஏற்பாடு களுக்குச் சா காத் தன்மையுண்டென்பதற்கு உள்ளபடியே நாம் உரிமை கெண்டாட இயலும். ஆல்ை, அவற்றை இனிமையும் புதுமையும் ஆ ற் ற லு ம் பயனுமுன்ளதாய் வைத்துக் கொள்வதில் நாம் வெற்றி பெற்ருேம் இல்லே. ஏனெனில் அவற்றை நாம் சிக்கிச் சீரழிய விட்டுவிட்டோம். ஓர் ஏற்பாடு நீடித்து நிலைபெற, மாரு இளமையினையும்