பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28


மாறுந் தன்மையினையும் கொண்டிருக்க வேண்டும் ?? என்று டாக்டர். இராதாகிருட்டிணன் கூறுகின்றார். இதனேயே வேறு வகையில் கூறவேண்டுமானல், புதுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அஃது இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு உள்ள எதிர்த்தாக்கு உள்ளத்தையும் ஒளி மறைவின்மையையும் நெகிழ்ச்சியினையும் வீரச்செயல் உணர்வினையும் அது கொண்டிருக்க வேண்டும். இதனால் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதை அறிகின்ற காரணத்தால் ஏற்று, அவர்கள் அதனை மாற்றியமைப்பார்கள்.

ஈயாஸ் என்னும் தெய்வம் ஒரு மனிதனைக் காதலித்துத் தன் காதலனுக்கு இறவாமை வேண்டுமென இறைவனை வேண்டிற்று. "அவ்வாறே ஆகக்கடவது"?. என்றார் இறைவனும். காதலனும் இறவாமை பெற்றான். ஆனால் முதுமையும் மூப்பும் சீரழிவும் உறுதியின்மையும் பெற்றான். ஈயாசின் கண்களுக்கு முன்பு விருந்தாக இருந்தது, இப்பொழுது வருத்தப்படுவதற்கும் வெறுத்தொதுக்குவதற்குமூரிய காட்சியாயிற்று. இறவாமை பெற்ற காதலனும் இறக்க நாட்டம் கொண்டான். ஏனெனில் சீரழிவில் சிக்கும்பொழுது, வாழ்வு.என்பது ஏதுமற்ற ஒன்றே. பின், ஈயால் வருந்திக் கூறிய தாவது "மாறா இளமை வேண்டுவதை மறந்து, என்னுடைய காதலனுக்கு இறவாமையே வேண்டினேன் "?.

இந்நாட்டிலுள்ள நாம் இத்தகைய நிலைமையினை நோக்கியவாறு உள்ளோம். நம் எண்ணத்தினையும் பண்பாட்டினையும் நாகரிகத்தையும் இளமையாக்கும் பொறுப்பை நாம் ஏற்றுள்ளோம். அம்முயற்சியினைச் செய்வதற்கு மாறாக நீண்ட காலமாகச் சிதைந்த வடிவங்களைத் திறனாய்வாளர்களிடமிருந்தும் புதிய கருத்தோட்டங்களிலிருந்தும் பாதுகாக்கவே நாம் பெருவிருப்பங் கொண்டுள்ளோம். உலகின் மற்றப் பகுதிகளோ, சலிப்பில்லாமலும் பொறுமையுடனும் உண்மையினை ஊடுருவிப் புதிய முடிவுகளைக் காணும்