பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41

 இச்செயல்களைப் பெற்றிடத் திருவள்ளுவர் தெள்ளிதின் கூறிய இலக்கு நோக்கி நாம் ஏகுவோம்.

"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு"?

இந்நோக்கத்துடன், அண்ணுமலைப் பல்கலைக் கழகம் உங்களைப் பரந்த உலகிற்கு அனுப்புகிறது என்னும் நம்பிக்கை உடையேன் நான். நீங்கள் வெற்றி பெறுவீர். ஏனெனில், இந்நிறுவனம் உங்களுக்களித்துள்ள ஆற்றலால், நீங்களே போதிய அளவு தகுதி பெற்றுள்ளீர்கள்.

உங்களுடைய வாழ்வு ஒளி நிரம்பியாக இருக்கட்டும். அதன் ஒளி நாடுமுழுவதையும் ஒளிரச் செய்யட்டும். எனது பாராட்டுக்களே ஏற்றுக்கொள்ளுங்கன். புன்னகைபுரி நோக்கி ஏறுநடை போடுங்கள்.

வகைப்பாடு : கல்வி-பல்கலைக் கழகத்தின் பணி

[18-11-67 அன்று அண்ணுமலைப் பல் கலே க் கழகத்தில் ஆற்றிய ஆங்கிலப் பட்டமளிப்பு விழா உரையின் தமிழாக்கம்].F_6