பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40


நான் பயில்கின்றேன், ஆய்கின்றேன், நான் தேர்வு செய்கின்றேன், ஓர்கின்றேன, நான் சிந்தனை செய்கின்றேன், இவையெல்லாவற்றின் விளைவாக நான் ஒரு கருத்தை உருவாக்க முயலுகிறேன் அதில் என்னாலியன்ற பொதுஅறிவைச் சேர்க்கின்றேன்.

அகப் பயணமே நீண்ட நெடிய பயணம் என்பதை நினைவு கூறுங்கள். அப்பயணத்தின் தொடக்கப்புள்ளியே பட்டம் பெறுதல். நீங்கள் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்!

இலக்கினை அடையுங்கள். மற்றவர்களும் அவ்விலக்கினை அடைய அறிவு கொளுத்துங்கள், அவ்விலக்கு இதுவே.

கையேந்தாப் பிச்சைக்காரர் கஞ்சரின் கன்னெஞ்சம் கற் பார்வை தேவையின் தவிப்பு குற்றத்தின் குறுகுறுத்த முகம் பொய்யுரைக்குஞ் சீற்ற உதடுகள் ஏளனத்திற்குரிய கொடிய கண்கள் இவை இல்லா உலகம் ஊனில் நோய்நொடியில்லா இனம் வடிவழகுள்ள மூளை வடிவமும் பயனும் ஒருமித்த இணைப்பு எங்கு வாழ்வு நீடிக்கிறதோ எங்கு அச்சம் மடிகிறதோ இன்பம் ஆழமாகிறதோ அன்பு அடர்வுறுகிறதோ அங்கு மனிதன் தன் மாண்பின் மீண்டும் பெறுகிறான்