பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39

 யறிவு ஆக்கப்படுகிறது. ஒரு பெருமரத்தின் இயற்கை வளர்ச்சி மண்ணிலிருந்து அதன் அடித்தண்டு வழியாகக் கிளைகளை அடைந்து, பின் இலக்கும் கணிக்கும் பரவுவது போல், வாழ்வின் வலிமையும் பயனும் ஏற்படுகின்றன. பெரும் போராட்டம் நடத்தும், இனந்தெரியாத மனிதக் கூட்டங்களே ஒவ்வொன்றின் அடிப்படையிலும் உள்ளன. இவையே சமுதாய நிலையினை மேல் மட்டத்திற்கு உயர்த்தும் இயக்க ஆற்றலாக அமைகின்றன. ஒரு நாட்டின் பெருமை அதன் பொது நிலையாளர்களின் பெருமையைப் போலவுே உள்ளது."?

இப்பல்கலைக் கழகத்திருந்து மலர்ந்து செல்லும் இளைஞர்களாகிய உங்கட்கு எனது கோரிக்கையினைத் தெரிவிக்கட்டுமா ?

உறுதியாக இருங்கள், ஆனால் விடப்பிடியாக இராதீர். கருத்துக் கலவை இருக்கட்டும். ஆனால், ஒருபொழுதும் மலிவான தழுவலும் ஊறு தரத்தக்க கலப்படமும் இருக்கக் கூடாது. பழுதுபட்ட கருத்துக்கள் நெறிமுறைகள் என்று தவறாகக் கருதாதீர் ; எச்சரிக்கையாக இருப்பீர். வெறியினை வாய்மையாகக் கருதாதீர். ஒரு கருத்துத் தொகுப்பை நாடுங்கள். அடிமைக் காட்படுவதை அகற்றுங்கள். அநீதிக்கு எதிராகப் போராடத் தவறாதீர். ஆனால், உங்கள் கருத்தினை இறுதியானது என்று வெளிக்காட்டாதீர். பன்டைய தமிழ் முதுமொழியினை மறக்காதீர்,

நீங்கள் கூறுவதை நடைமுறையாக்கத் தயங்காதீர். இம்மாபெரும் பணியினைச் செய்வதற்குரிய அடிப்படைத் தேவைகளை உங்களுக்களிப்பது பல்கலைக்கழகக் கல்வியே. ஆனால், அதுமட்டுமே போதாது. இதனை இலஃபயிட்டியின் வழி கூறுவோம்.