பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38

 "அவன் நம்ப முடியாதவன் போல் காணப்படுகிறான். ஆனால், மனிதகுலத்தில் மூன்றில் இரண்டு பங்காவான். அவன் குடிசையில் வாழ்கிறான். அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவனது ஆற்றலை நோய் உறிஞ்சிவிட்டது. ஒரு நாளைக்கு அவன் 15 மணி நேரம் உழைக்கிறான். அதுவும் தனக்குச் சொந்தமல்லாத நிலத்தில், அவன் தனது குடும்பத்துடன் வழக்கமாகப் பட்டினியால் வாடுபவனே. இளமையிலேயே அவன் சாவான். ஆனால், அவன் தன்னுடைய குழந்தைகளுக்கு நம்பிக்கைளையும் வைத்துள்ளான். அவர்கள் உடல் நலமும் வலிமையையும் உடையவர்கள் ; எழுதப்படிக்கக் கூடியவர்கள் என்பதே அந்நம்பிக்கைகள், அமைதியான உலகத்தில் தனியாள் உரிமையினை அவன் அறிவான். இத்தகையவனே உலகச் சராசரி மனிதன்.",

உலக முழுதும், இச்சராசரி மனிதன் தனக்குச் செய்யப்படும் அநீதியினைக் அறிந்தவண்ணம் உள்ளான். அதன் விளைவாகப் போராட்டங்கள் பேரணிகள், மோதல்கள், சண்டைசச்சரவுகள் ஆகியவற்றை நாம் காணுகிறோம். பல நாடுகளில் அவனது நிலையினை உயர்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

"நாங்கள் பின்வாங்க மாட்டோம். சராசரி மனிதனைக் கைவிடமாட்டோம்"?. என்று இங்கே இப்பொழுதே நீங்கள் உறுதிமொழி கூறுங்கள். அடிப்படை ஆட்டங்கொடுக்குமானால், அணிமாடம் அழிவுறும். உயர்ந்த மரபுவழி வந்தவர்களாக இருப்பதால் இச்சீரியப் பணியினைச் செய்ய நீங்களே சாலத்தகுதியுடையவர்கள். இந்நாட்டின் எதிர்காலமும் ஏனைய நாடுகளின் எதிர்காலமும் அப்பணியின் வெற்றியைப் பொறுத்தே அமையும்.

உட்ரோ வில்சன் கூறியதை இங்கு நினைவு கூர்வோம் : "நாடுகள் அடிமட்டத்திலிருந்தே புதிப்பிக்கப்படுகின்றன, மேல் மட்டத்திலிருந்து அன்று. சாதாரண மனிதனின் பட்டறிவுகளிலிருந்து மனித வாழ்க்கையின் மெய்