37
இங்கு மிகப் பழமையுடையது, இன்று மிகத் தற்காலத்தது என்று அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதனை நீங்கள் அறிவிக்க வேண்டி உள்ளீர்கள்.
மிகப் பழமை வாய்ந்த பண்பாட்டின் தாயகம் தென்னிந்தியா ஆகும். நீண்ட காலமாக அடர்ந்து பரவியுள்ள அறியாமை இருள் இருந்த போதிலும், கிறித்து பிறப்பதற்கு ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே மிக உயர்ந்தோங்கி வளர்ந்த திராவிட நாகரிகம் இருந்தது என்பதனே எல்லோரும் இப்பொழுது ஏற்றுக்கொண்டுள்ளனர். நுண்ணிய கருத்தினையுந் தெரிவிக்கும் கருவியாகத் தமிழ்மொழி செம்மையாக வளர்ந்தமைக்கும், அதன் இலக்கிய அழகுக்கும் செழுமைக்கும் பல அயல் நாட்டறிஞர்கள் சான்று பகர்கின்றனர். ஆகவே, திரவிட இலக்கியம், மெய்யறிவியல், கலை, சிற்பம் ஆகியவை திறன்மிகு ஆராய்ச்சிக்குச் சிறந்த பயனுள்ள துறைகளாக இலங்குகின்றன.
வெறும் புகழுக்காக மட்டுமல்லாமல், நம் பண்டைய மரபு வழியில் உண்மைப் பயனும் அழகுமுள்ள எல்லாவற்றையும் நேரிய முறையில் பாராட்டவே இந்த ஆய்வும் ஆராய்ச்சியும் நமக்குத் தேவை.
அரசியல் அரங்கில் உங்கன் பொறுப்பு பற்றி நான் பேசப் போவதில்லை. மக்களாட்சியினை நிலையானதாகவும் நிறைவுள்ளதாகவும் நலமும் நற்பயனும் தருவதாகவும் நீங்கள் செய்ய வேண்டும் என்று கூறவில்லை அதுபோதும் என நினைக்கிறேன்.
இப்பல்கலைக்கழகம் உங்களுக்குகளித்துள்ள செய்தியினை நீங்கள் எங்குச் சென்றாலும் எங்கிருந்தாலும் எடுத்துச் செல்லுங்கள். பாமரனை-சராசரி மனிதனை-உயர்த்துங்கள். இந்நாட்டுக்கு மட்டுமன்று, மற்ற எல்லா நாடுகளுக்கும் அவன் முதுகெலும்பாவான். அச்சராசரி மனிதனின் சொல்லோவியத்தை உங்கள் முன் அளித்திட அனுமதி வேண்டுகிறேன்.