பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

 தமிழ் இலக்கியத்தினையும் தேர்ந்து தெளிந்து கற்றார். இன்னுஞ் சில ஆண்டுகள் அவர் வாழ்ந்திருப்பாரேயானால், தமிழ் இலக்கியங்களின் செய்தியினைச் சுமந்த வண்ணம் உலகின் பல நாடுகளுக்கும் சென்றிருப்பார். கடந்த பழம் பெருங் காலத்தைப் பற்றிப் பேசப்பட்ட செய்தி தான் என்ன?

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"? -திருமந்திரம் (2066)

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"? - புறம் (192)

"வினையே ஆடவர்க்கு உயிரே"? - குறுந்தொகை (135)

"நல்லது செய்தல் ஆற்றி ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்"? - புறம் (195)

"எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை ; வாழிய நலனே!"? - புறம் (187)

"செல்வத்துப் பயனே ஈதல்;"? - புறம் (189)

"தீதும் நன்றும் பிறர்தர வாரா"? - புறம் (192)

"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை"? - குறள் (322)

இப்பாடல்களில் அமைந்துள்ள கருத்துக்கள் இப்பொழுது உலகின் முன் இக்காலத்தின் மலர் களென வைக்கப்படு கின்றன.

7

அண்ணுமலைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளே ! முழு உலகிற்கும் நம் இலக்கியங்களின் செய்தியினே எடுத்துச் செல்லும் தனிப் பொறுப்பினை ஏற்க வேண்டியுள்ளீர்கள்