பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35

 "தமிழ்ப் பண்பாடு, வரலாறு ஆகியவற்றை முழுவதும் அறியாமலேயே நான் பட்டம் பெற்றேன். உண்மையில் நான் அவற்றை அதிகம் புறக்கணித்தேன். ஐரோப்பியப் பண்பாட்டு வரலாறு, ஆங்கில இலக்கியம் ஆகியவற்றில் நான் போதிய திறமை பெற்றேன். கோதிக், ஆங்கிலோ-சாக்சன் ஆகிய மொழிகள் பற்றியும் நான் ஓரளவு அறிந்தேன். பேராயர் உல்பியாஸ் கோதிக் மொழியில் மொழி பெயர்த்த விவிலியத்தைப் படித்தேன். ஆனால், திருவள்ளுவரின் குறளே நான் படிக்கவில்லை. சாசரை நான் அறிய முடிந்தது. ஆனால், இளங்கோவின் பெயர் பெயராக மட்டுமே எனக்குத் தெரிந்தது. கல்லூரியை விட்ட பின்னரும், இவற்றை எல்லாம் படிப்பதில் புத்தார்வங் காட்டினேன். தமிழ்நூல் ஒன்றுகூட இல்லாத ஒரு நூலகத்தை அமைத்தேன்.

என் இளமையின் தோடக்ககாலத்தில் பொறுப்புணர்ச்சி இல்லாமல் என்னுடைய உலகில் நான் வாழ்ந்தபொழுது, இவையெல்லாம் ஒரு வேறுபாடகத் தோன்றவில்லை. என்னுடைய கல்வி பற்றிப் பெருமை கொண்டேன். கவலை களுக்கும் சிக்கல்களுக்குமுரிய மனிதப் பருவம் விரைவில் வந்த பொழுது, என்னுடைய இல்லத்திலேயே நான் ஒர் அவலான் என்பதைக் கண்டேன். படிப்படியாக என்னுடைய வாழ்க்கைத் திட்டத்தின் பொருந்தாக் கூற்றை நான் உணரத் தொடங்கினேன். இப்பொழுதிலிருந்து சிறிது காலமாகச் சமநிலையை அடை முயன்று வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் இலக்கியங்கள் சிலவற்றைச் சீரிய முயற்சியோடு படிக்க முயன்றேன். உலகின் இறவா இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்கவை அவை என்பதை நான் அறிகிறேன். என்னுடைய நாட்டின் அறிவுக் கருவூலங்களேயே புறக்கணித்தமைக்காக நான் இப்போது கசந்து வருந்துகிறேன்."?

அது ஒரு வருத்த உரையன்று; ஒரு புதிய உறுதிப்பாட்டின் வெளிப்பாடு. சர். ஆர். கே. சண்முகம் இவ்வுண்மையினை நிலைநாட்ட வாழ்ந்தார். தமிழ்மொழியை மட்டுமல்லாது