பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

 கல்விக்கூடமாக மட்டுமல்லாமல், தமிழ் மக்கள், தமிழ் பண்பாடு ஆகியவற்றின் ஆராய்ச்சிக் கூடமாகவும் விளங்கவே விரும்பினர் என்பதை நாம் கண்கூடாகக் காண இயலும். தமிழர்கள் தங்கள் தனித் திறமையினைப் பேணி வளர்க்கப் போகின்றனர்."? என்பதை முன்கூட்டியே அவர் உணரலானர். அதன் காரணமாகவே, தமிழிசை இயக்கத்தைத் துவக்கி, அறனை அவர் வெற்றிபெறச் செய்தார். ஒருபொழுதும் அவைக்கு தவறாகச் பேச்சு பேசுபவர் அல்லர் அவர்; திண்ணிய பணியில் நம்பிக்கையுள்ளவர். நம்முடைய வரலாற்றினையும் இலக்கியத்தினையும், பண்பாட்டினையும், நாகரிகத்தினையும் நுணுகி ஆராயக் காலம் வரும் என்றும், உலக மன்றத்தில் ஏற்றமிகு ஏற்பை பெறுவதில் வெற்றி பெறுவதற்குரிய காலம் வரும் என்றும் அவர் அறியலானர்.

இலக்கியத்துறையில் நமது அருஞ்செயல் உண்மையில் சிறந்ததாகும். உலகிற்குப் பறை சாற்றும் வகையில் தமிழர்களாகிய நாம் இவற்றைப் பெற்றுள்னோம்.

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு றெத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத்தோகை"?

எட்டுத்தொகை விளக்கப்பாட்டில்

தவிர, முழு மனிதச் சமுதாயத்திற்கும் நன்னெறியாகவுள்ள அரும்பெருந் திருக்குறளே உலகுக்கு அளிப்பது பற்றி, நாம் பொருத்தருளத்தக்க பெருமிதத்தினையும் பேருவகையினையும் கொள்ள இயலும்.

இருப்பினும், இத்தமிழ் இலக்கியங்களில் நாம் போதிய கவனம் செலுத்துகிறோமா? கடந்த பத்தாண்டுகள் வரை இல்லை என்றே சொல்ல வேண்டும்.

1948. ஆம் ஆண்டு இங்கு ஆற்றிய பட்டமளிப்பு விழா உரையில் நம் இரங்கலுக்குரிய காலஞ்சென்ற சர். ஆர். கே. சண்முகஞ் செட்டியார் கூறியது பின் வருமாறு: