பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

 கப்பட வேண்டுவதில்லை. கல்லூரிகளில் முன்னேற்றந்தரும் வகையில் தமிழினேப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்னும் நெறிமுறையின் ஒப்புக்கொண்டு, உரிய எச்சரிக்கயோடு அதனைச் செயற்படுத்தி வரும் நடைமுறையிலிருந்து ஆங்கிலத்திற்கு உயரிய இடத்தை நாம் அளிக்க வில்லை என்பது நன்கு தெரிகிறது.

6

பல்கலைக்கழகக் கல்வி என்பது பல்வேறு நாடுகளிலும் பேணிப் போற்றப்படும் சிறந்த எண்ணங்களின் பொழிவேயாகும். உங்களிடமிருந்தே உலகளாவிய எண்ணமும் கருத்தும் பரவ வேண்டும்.

இவற்றை எல்லாம் நாம் பெறவேண்டுமென்றால் - பல்கலக்கழகப் பட்டதாரிகளிடமிருந்து அதிகம் பெற வேண்டுமென்றால் - பல்கலைக்கழகங்களில் நடப்பிலுள்ள முறைகளேயும் பயிற்றுமுறைகளையும் ஆட்சிமுறைகளையும் நாம் மறு ஆய்வு செய்து செம்மைப்படுத்த வேண்டும். இதனால், ஒவ்வொரு மாணவரும் தம்முடைய பேராசிரியர்களோடு அறிவைப் பெறுவதில் உவகையிலும் உரிமையிலும் உடன்பங்காளர் என்பதனை உணர இயலும். பயிற்று முறைகள், ஆட்சி முறைகள் ஆகியவை பற்றி ஆழமாக நான் கூற விரும்பவில்லை. அவ்வத்துறை வல்லுநர்கள் அவற்றின் இயல் பாதுகாவலர்கள் ஆகும். எனது கோரிக்கை மறு ஆய்வு பற்றிய இன்றியமையாமை குறித்ததேயாகும்.

பல்கலைக் கழகங்களுக்கென்று வரையறை செய்யப்பட்ட பணிகள் பெரும்பாலும் ஒரே வகையானவையே என்றாலும், அதன் அமைப்பு, ஆற்றல் ஆகியவற்றால் அண்மைலைப் பல்கலைக் கழகத்திற்கென்று தனிப் பணியுள்ளது. இப்பல்கலைக் கலகத்தின் நிறுவியவரின் பெருந்தன்மை இங்கும் எங்கும் உள்ள பேரறிஞர்களின் மதிப்பினைப் பெறச் செய்துள்ளது. ராஜா சர் அண்ணுமலைச் செட்டியாரின் எண்ணத்தினையும் முனைப்பாற்றலையும் பகுத்துப் பார்ப்போமானால், இவ்விடம்

F-5