பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32


தக்க அளவுக்கு அமையும். இருந்தும், இங்கு இந்தோன் இ8ணப்பு மொழியாக இருக்க வேண்டுமென்று பரிந்து பேசுவது ஏன்?

வெளியுலகத்தோடு நம்மை இணைக்கும் மொழியே, திண்ணமாக அதே பணியினை இந்தியாவினுள்ளும் ஆற்ற இயலும். இரு இணைப்பு மொழிகளுக்குப் பரிந்து பேசுவது என்பது சுவரில் பூனை செல்லப் பெரிய துளை இருக்கும் பொழுது, அதன் குட்டி செல்லச் சிறிய துளையிடுவது போன்றுள்ளது. பூனைக்குப் பொருந்துவது குட்டிக்கும் பொருந்துவதே.

எந்த ஓர் அயல் நாட்டுப் போருளையும் நாம் அழிப்பது போன்று அல்லது விட்டுவிடுவது போன்று, ஆங்கிலம் அயல் மொழி என்று சிலர் வாதிடுகின்றனர். அயல்நாட்டுக் கப்பல்களில் நாம் கோதுமையினைக் கொண்டு வருகிருேம், பணத்தில் மட்டுமல்லாமல் தொழில் நுட்ப அறிவிலும் நாம் அயல்நாட்டு உதவியினைப் பெறுகிருேம், யாராவது ஒரு தலைவர் கிழக்கிற்கும் மேற்கிற்கும் முடிந்த உதவியிணைப் பெறச் செல்லாத வாரமே இல்லை எனலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கே உரிய பல ஏற்பாடுகளே நாம் கைவிட்டுவிட்டோம். கிராமியப் பொருளாதாரத்தோடு நாம் அமைதியடையவில்லை ; டிராம்பேக்களையும் எண்ணூர்களையும் விரும்புகின்றோம், அவை அயல்நாட்டவை என்பதை நாம் அறிந்தோம் இல்லை. மொழி பற்றிய விவகாரத்தில் மட்டும் அளவுக்கு மீறிய தேசியவாதிகளாக நாம் நம்மைக் காட்டிக் கொள்கிறோம் ; ஆங்கிலத்தினை அயல்மொழி என்கிறோம்.

ஷெல்லியும் பைரனும், கீட்சும் கோல்ரிட்ஜும், எமர்சனும் பேக்கனும் கூர்ந்து நோக்குமிடத்து, நமக்கு அயலார் அல்லர். திருவள்ளுவர் வெறுந் தமிழர் மட்டுந்தான? அவர்கள் எல்லாம் உலகின் நற்குடி மக்கள், உலக நல்லாசான்கள். அவர்களது கருத்துக்களை அடக்கிடும் மொழி அயல்நாட்டில் இருந்து வருகிறது என்பதற்காகப் புறக்கணிக்