பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


மக்கள் தங்கள் நாடுகளில் செய்துள்ள சீனகலத்தைப் போன்றதன்று அது. பிளாஸ்டிக் போன்று, அவர்களது மக்களாட்சி ஆக்குவதற்கு எளிது. ஆனால் நாம் உலகங்கலோடு ஊடாடிக் கொண்டிருக்கிறோம்'?.

நாட்டு ஒருமைப்பாடு என்பது உயர்ந்ததும் அதிகம் நாடப்படுவதுமான ஒர் இலக்கு. ஆனால், மொழித்துறையிலோ பொருளாதாரத் துறையிலே அநீதியினையும் ஆதிக்கத்தினேயும் பொறுக்க இயலாது. அக்காரணத்திற்காகவே இவ்வரசு அமைந்துள்ளது. இந்தியினை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளுமாறு வலுவந்தப்படுத்த முடியாது என்னும் மக்கள் உறுதிப்பாட்டினேப் பிரதிபயலிப்பதகவே அஃது உள்ளது.

இணைப்பு மொழியாக ஆங்கிலமே தொடர வேண்டும் என்று நாம் விரும்பும்பொழுது, சிலர் நமது நோக்கத்தினைத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். பொருந்தா வாதங்களேயும் மறுக்கக்கூடிய புள்ளி விவரங்களையும் அவர்கள் அள்ளி வீசுகின்றனர். சீரழிவு என்னும் பூச்சாண்டி காட்டுகின்றனர்; படைகளைக் காட்டி அச்சுறுத்தி மக்களே வாயடைக்க விரும்புகின்றனர். வல்லடி முறைகளில்லை. சிக்கல்கள் ஒரு பொழுதும் தீர்க்கப்பட்டதில்லை. இப்பொழுது மட்டுமன்று எதிர்காலத்திலுங்கூட இந்த மொழிச் சிக்கல் நம் வாழ்க்கை முறையோடு இரண்டறக் கலந்தது.

தமிழும் ஆங்கிலமும் நம் எல்லாத் தேவைகளையும் நிறைவுசெய்ய வல்லவை என்றும், முன்னது இம்மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் பின்னது இணைப்பு மொழியாகவும் இருக்க வல்லவை என்றும் தமிழ்நாடு அரசு ஐயந்திரிபறக் கூறியுள்ளது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் - இந்தி ஆதரவாளர்களில் மிக முனைப்பாக உள்ளவர்களும் அதனே ஏற்றுக் கொள்கின்றனர் - வெளியுலகிற்கும் நம் மாநிலத்திற்குமிடையே இணைப்பு மொழியாக ஆங்கிலம் போற்றத்