பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சனநாயகமும் தனிநாயகமும்


"சனநாயகம் பரவி வரும் வேளையில் உலகில் தனிநாயகமும் விளங்கத் தான் செய்கிறது. தமிழக மண்ணிலே தமிழ் காக்கப் போராடும் நிலையிருக்க, உலகெங்கம் சென்று கன்னித் தமிழின் மென்மையை, இனிமையை - மணத்தைப் பரப்புவதில் உலகிலே ஒரு தனிநாயகம் தோன்றித் தான் உள்ளது. அந்தத் தனிநாயகம் யார் என்றால் இங்கு வீற்றிருந்து தமிழே உயிரென்றும், தமிழ்ப் பணியே வாழ்வென்றும் கருதித் திகழ்ந்துவரும் அடிகளாரே"!யாவார்.

"அவர் எங்கெங்கு சென்றிடினும் தமிழுக்கென்றே ஒரு தனிநாயகத்தை ஏற்படுத்தி வருகிறார். பெயருக்கேற்ற ஆட்சி, என்னே அவரது பெயர்ப் பொருத்தம்!

மலேயப் பல்கலைக்கழகத்தில் அண்ணா

"அண்ணாவின் இதயத்திலிருந்து வரும் தமிழின் இனிமை கண்டு அண்ணாவின் மாணவனாக ஆகும் பேறு எனக்குக் கிட்டவில்லையே என வருந்துகிறேன்"

நன்றியுரையில் தனிநாயகம் அடிகள்