பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மக்களின் சுதந்திரம் காக்கப்படவேண்டுமானால்.- மக்களாட்சி ஏற்படவேண்டும். ஓநாயைச் சாதுவாக்கி ஆட்டுக்குக் காவல் வைக்கவும் முடியாது; உருத்தி ராட்சம் அணிந்ததாலேயே பூனை, போதகாசிரியனாகி விடாது. பான்மை பொது திறமை மிக்க ஓவியக் கலைஞன், திரையில் தீட்டிய தீங்கனி குலுங்கும் மரத்தின் காட்சியைக் கண்டு உயிர்ப் பறவை மயங்கி, கனியை அங்கு வட்டமிடும் காட்சிப் போல, தந்திரமான பிரச்சாரத்தால் மயங்கிடும் மனப் மக்களிடம் இருக்குமானால். மக்களாட்சிக் காலத்தில், சாதுர்யக்காரர்கள் சர்வாதி காரமும் பெறமுடியும். சுதந்திரத்தைக் கேலிக் கூத்தாக்கிவிட முடியும். ஆகவேதான் இந்நாட்களிலே மக்களின் சுதந்திர வாழ்வுக்குச் சிந்தனைத் தெளிவுதான் மிகவும் அடிப்படையாகத் தேவைப்படுகிறது. உயர்ந்த ஜாதிக்காரர், கொழுத்த பணக்காரர், தேர்ந்த தந்திரக்காரர், மிகுந்த வடிவுள்ளவர் என்று எந்தக் காரணத்தைக் கொண்டாகிலும் ஒருவர் மற்றவர்மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வழி அமைந்து விடுமானால், அங்கு ஏட்டிலே எவ்வளவு தான் சிறந்த முறையில் சுதந்திரத்தின் கோட்பாடுகள் - சாசனம். தீட்டப்பட்டிருப்பினும். உண்மையான சுதந்திரம் மலராது - நிலைக்காது.