பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 ஒரு சிலர், உயர்ந்த ஜாதியினர் என்று கூறப்பட்டு, மக்களால் நம்பப்பட்டு, அந்த நம்பிக்கை முறியாதிருக்க ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு விடுமானால், பிறகு அவர்கள் மற்ற மக்களைத் தமது இச்சைப்படி ஆட்டிப் படைக்கமுடியும். செல்வத்தால் சக்தியைக் கொண்டு சுதந்திரத்தைச் சூறையாடிவிடமுடிகிறது. இவரை எதிர்த்து நாம் என்ன செய்யமுடியும்? அவர் நம்மைப் பணத்தாலேயே அடித்தும் கொன்றும் விடுவார் என்ற அச்சம் பிடித்தாட்டும் போது சுதந்திரமாகச் சிந்திக்கவோ, நடந்து கொள்ளவோ எப்படிச் சாத்திய மாகும்? மனிதருக்குள் பேதத்தையும் அச்சத்தையும் மூட்டக் கூடிய, வளர்க்கக்கூடிய எந்த ஏற்பாடும், சுதந்திரத்தின் பரம விரோதிகளே. 妆 ஜெபமாலை, இரும்புப் பெட்டி, எதைக் கருவி யாகக் கொண்டாலும் சரி. இவைகள் மூலம் ஆதிக்கம் செலுத்தும் நிலை இருக்குமட்டும் மனித, சுதந்திரம் பறிக்கப்பட்டுதான் போகும். பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம், ஏட்டில் இருக்குமளவுக்கு நடைமுறைக்கு வருவதில்லை. சொல்லுகிறபடி செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்க்கும். சொன்னபடி செய்யக்காணோம் ஏன்