பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

115 என்று கேட்கும், விழிப்புணர்ச்சி மக்களுக்கும் ஏற்பட வேண்டும். அரிசிப் பஞ்சமும் அமெரிக்கா நாட்டுப் பிரச்சினையும் ஒருசேர மக்களின் முன் வந்து நிற்கும் போது, அமெரிக்கத் தேர் தலைப்பற்றி அல்ல, அரிசி விஷயமாகத் தான் மக்களால் அதிகமான அக்கரை காட்டமுடியும். மக்களாட்சி முறைக்குத் தேவையான, தேர்தல் யந்திரத்தையே விலைக்கு வாங்கி விடக்கூடிய அளவு பொருளாதார பலம் சிலரிடமும், செக்கு மாடென உழைத்தால் தான் வாழவே முடியும் என்ற நிலையுள்ள பொருளாதார பீடை பலரிடமும் இருக்கும் பொருளாதார பேத முறை ஒழியவேண்டும். பெரும்பாலான மக்கள் சுகமாக வாழவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். அது தவறும் ஆகாது, அந்தச் சுக வாழ்வுக்கு, என்ன வழி என்று சிந்தித்தபோது கிடைத்த பல எண்ணங் களிலே மிக முக்கியமானது சுதந்திரம் என்ற கருத்து.

அடிமைத்தனம் ஒரு கூட்டுச் சரக்கு. அடிமைத் தனம் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்தாலும், அடிமைத்தனம் என்பது ஒரு கூட்டுச் சரக்கு என்பது தெரியும். ஆதி மனிதன், மிகமிகச் சுதந்திர புருஷன்-அவன் வரி செலுத்தியதில்லை. அவனைக் கட்டுப்படுத்த எந்தச்