பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 சட்டமும் கிடையாது. 144-வது செக்ஷனை அவன் அறியான். வழக்கு மன்றமும் கிடையாது. வாதாடும் முறை கிடையாது; சிறையோ சிரச்சேதமோ கிடை யாது. இங்கே நுழையாதே; இதைத் தொடாதே; இப்படிச் செய்யாதே என்று அவன் ஆட்டிவைக்கப்பட வில்லை. கண்ணெதிரே தெரிந்த காட்டில் தன்னிச்சை யாகத் திரிந்து, பசித்தால் புசித்து, அலுத்தால் உறங்கி, கோபம் வந்தால் கூவி, குதூகலம் வந்தால் ஆடிப்பாடிக் கொண்டுதான் இருந்தான். வானத்தில் வட்டமிடும் பறவை, இறையும் இருப் பிடமும் தேடி, பலவற்றைக் கண்டு ஏதேனும் ஒன்றினைக் கொண்டு மகிழ்தல் போலச் சிந்தனைத் திறம் படைத்த. மனிதன், சுக வாழ்வுக்கான சாதனங்கள் யாவை என்று தேடிய வண்ணம் இருந்து வந்திருக்கிறான்; பல தவறு களை இழைத்திருக்கிறான். வட்டமிடும் பறவையைக் கொத்தவரும் வல்லூறு போலச் சுக வாழ்வு தேடின் மனிதனைக் கொடுங்கோலர் வதைத்து மிருக்கிறார்கள். பல கஷ்டங்களுக்குப் பிறகு மக்களாட்சி முறையே, சுக வாழ்வுக்குச் சரியான சாதனம் என்று முடிவு செய்திருக் கிறான்.