பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்களில் முக்கியமான வர்கள், முதல்வர்கள், முன்னணி வீரர்கள். மறைமலை அடிகளாரின் தமிழ்ப் பற்றும், தனித் தமிழ் உணர்ச்சியும், திரு. வி. க. அவர்களின் தமிழார் வமும், தமிழ்ப் பண்பும், இருவரது தமிழ்த் தொண்டும். தமிழ் வளர்ச்சியில் அவர்களது பேரூக்கமும், இடை விடாத உணர்வும் உழைப்பும் தமிழர் இதயங்களில் இரண்டறக் கலந்து விட்டன! தமிழர் சரித்திரத்தில் தமிழ் மொழியின் மறுமலர்ச்சி ஏட்டில், அவர்களது காலம், அவர்களது தமிழ் வாழ்வு என்றும் நிலைத்து நிற்பவை!! முத்தமிழ் முக்கனிகள்/ முத்தமிழ், முக்கனிகள்! மா, பலா, வாழை என்ற முக்கனி போன்றவை இயல், இசை கூத்து, தமிழ் மொழிக்கு கனிகளிற் சிறந்தவை? முக்கனிகள்- மா, பலா வாழை என்பவை. இயல், இசை, கூத்து என்ற பிரிவு களைக் கொண்ட மொழி, தமிழ்மொழி, நமது மொழி. சிறந்த மொழி! மாங்கனிகளைப் பொறுக்கி, தேர்ந்தெடுத்துப் புசிக்க வேண்டும். சில உறுதி தரும், உருசியோடு. வேறு சில உண்ண உருசியும், உடலுக்குத் தீங்கும் விளைத்திடும் பண்பு கொண்ட தாகவும் விளங்கிடும். பலப்பல பண்பு இது போலவே. இயல்! இயற்றமிழும் பல வடிவிலே, பல முறைகளிலே கொண்டது; பயன் தருவதாயும், பயனற்றதாகவும் பலப்பல வி தங்களிலே அமைந்திருக்கின்றன? புராண இலக்கியம், பொழுது போக்கு இலக்கியம், அறிவை அகலப்படுத்தும் இலக்கியம், அப்பாவி