பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 கின்றன என்ற செய்திகள் ஓரளவுக்கு மனமகிழ்ச்சியைத் தருகின்றன. இன்று இசையரங்குகளிலே, தனி அரசு செலுத் திடும் தியாகராஜ கீர்த்தனங்களின் ஆரம்ப நிலை என்ன? எந்த அளவிற்கு அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன என்பதை எண்ணிப்பாருங்கள்.

添 தியாகராஜ கீர்த்தனங்கள் ஆரம்பத்தில் பஜனை மடங்களில் பாடப்படும் வெறும் பக்திப் பாடல்களாக மட்டுமே மதிக்கப்பட்டன - கையாளப்பட்டன. நாளடைவில் காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை அவர்கள் அவற்றிற்கு இராகம், தாளம், பல்லவி முதலிய இசை அமைப்புக்களைப் பிரித்துப் பாகுபடுத்திப் பாடிக் காட்டினார் முதலில். நயினாப்பிள்ளை அவர்கள் செய்த மாறுதல் இசை துறையிலே மாறுதலை உண்டாக்கிவிட்டது! இதன் பின்னரே தியாகராஜ கீர்த்தனம் இசைவாணர்களின் திறமையை எடுத்துக்காட்டிடும் கருவியாகக் கையாளப் பட்டு வருகிறது. இந்த முறையிலேதான், பயன் கருதிச் செய்யப் படும் எந்த மாறுதலும், மறுமலர்ச்சியும், அதற்கான முயற்சியும் ஆரம்பத்திலே தரம் தாழ்ந்தவைகளாகக் கருதப்பட்டாலும், அவை தரும் பயனுள்ள விளைவு களால் பலவித நன்மைகள் நிச்சயம் ஏற்படுகின்றன.