பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

97 இசைத் துறையிலும் பழமையை நீக்கிப் புதுமை எண்ணங்களையும், நல்வாழ்வுக் கருத்துக்களையும் புகுத் திப் பயன்படுத்தவேண்டும். 券 ரேடியோவைத் திருப்பினால் ஏன் பள்ளி கொண்டீரையை ஸ்ரீ ரங்கநாதரே" என்பன போன்ற பாடல்களைக் கேட்கிறோம் அடிக்கடி. என்றோ படுத்து எழுந்திராத - எழுந்திருக்கவும் முடியாதவரைப் பற்றி ஆராய்ச்சியேன்? இதை விட்டு மக்கள் மனவளத்திற் கான பாதையிலே இசை வல்லுனர்கள் - இசை வாணர் கள் தம் திறமையைப் பயன்படுத்த வேண்டுகிறேன். நாடகத்தில் மறுமலர்ச்சி மிகமிக முக்கியமானது. நாட்டின் விழிப்புக்கு அது நல்லதோர் அளவுகோல், நாளை நாம் எப்படி இருப்போம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும். இயலிலும், இசையிலும் கருத்துரைகளைக் கேட்க மட்டுமே முடியும். நாடகத்திலேயோ, கருத்துரையைக் கேட்பதுடன் கருத்து விளக்கக் காட்சிகளைக் காணவும் முடிகிறது. எனவே நாடக மூலம், மனதை அதிகமான அளவுக்கு வசப்படுத்த முடிகிறது. மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் போல நல்ல திறமை, நாடகத்தைக் காண்பவர்களை நடிகனின் உணர்ச்சி வயத்தவராக்கிவிடுகிறது.