பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 அறிவு வளர, ஆர்வம் பிறக்க, மகிழ்ச்சி தோன்ற மக்களை நன்னெறியிலே புகவைக்க, நற்பண்புகள் உள்ளத்திலே குடிபுக - இப்படிப்பட்ட நற்காரியங் களுக்கு,முத்தமிழ் அதிலும் முக்கியமாக நாடகம், பயன் படல் வேண்டும் என்பது அடிப்படை உண்மை. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் கையே தலையணையாய், கட்டாந்தரையே படுக்கையாய் காய்ந்த வயிரே தோழனாய்க்கொண்டு கஷ்டப்படும் --பாட்டாளி முன்பு, விறகு வெட்டி வேதனைப்பட்ட சத்தியவான், ராஜ்யமிழந்து சுடலை அரிச்சந்திரன், பெற்ற குழந்தைகளைக் காத்த கிணற்றில் தள்ளிய நல்லதங்காள் இவர்களைக் காட்டி, எத்தகைய அறிவை வளர்க்க முடியும்! விதி - விதி என்று அவனை விம்மவைக்கத்தானே முடியும்.

நாடகம்:- இன்று நள்ளிரவுச் சத்தமில்ல - நடை யாலும், உடையாலும், விழியாலும், மொழியாலும், அரைத் தூக்கத்திலிருப்பவர்களுக்கு ஆனந்தம் தர முயற் சிக்கும், வெறும் ஆடல் பாடல் அல்ல! நாடகம், இன்று நாட்டுக்கு ஒரு நல்லரசனாக முன்வந்திருக் கிறது - துணிவுடன் இயல், இசை, நாடகம், மக்கட்கு அறிவு வளர ஆர்வமூட்ட அகமகிழ்ச்சி பிறக்க, நன்னெறியைக் காட் டப் பயன்படவேண்டும்.