பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

103 எந்தப் பேச்சு பலருக்கு இனிய தாய், பயனுடைய தாய் அறிவு நிரம்பியதாய்த் தோன்றுகிறதோ, அதே பேச்சு வேறு சிலருக்குச் கடு சொல்லாய், வெட்டிப் பேச்சாய், ஞான சூன்யமாய்த் தோன்றக் கூடும். 梁 பேச்சு இனிமையாக இருக்கவேண்டும். என்பதையே நோக்கமாகக் கொள்வதைவிட, மக்களையும் கொள்கை யையும் மதித்து நம்பிக்கையுடன் பேசும் நோக்கம் சிறந்தது - மேலானது. பேசும் பொருள் பயன்படத் தக்கதாகவும், வீணான வீம்புக்கு வித்திடாத வகையிலும் அமைத்துக் கொள்வது நல்லது. இனித்தே ஆகவேண்டும் என்று முயன்றால், ஜதங்கையும் ஜாலரும் தேடித் தீரவேண்டி வரும். வள்ளுவர் வாக்கின்படி பேச்சு அமைவதற்கு, வள்ளுவர் வாக்கின்படி கேட்பவர்களும் அமைய வேண்டும். பேசுபவர்க்கு முறை கூறிய வள்ளுவர் கேட்பவர்க்கும் முறை கூறி இருக்கிறார். "எப்பொருள். யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" ஆனால் நடைமுறையில் இந்தக் குறள் இல்லை. மெய்ப் பொருள் காண்பதறிவு என்கிறார் திருவள்ளுவர்; மெய்ப் பொருள் காண்பதரிது என்று ஆகிவிட்டது நிலைமை. மலர் கொண்டு மாலை தொடுத்தலிலே கைத்திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கைத்திறன் முழு