பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 வதும் காட்டி, காகிதப் பூமாலை தொடுத்தால் பயன் என்ன? மாலைக்கு முதற்பொருள் மணமுள்ள மலர் அதுபோலப் பேச்சுக்கு முதற்பொருள் சுவையும் பயனும் உள்ள கருத்துக்கள்.

மாற்றான் வீட்டுத்தோட்டத்திலே மல்லிகைக்கு பூத்திடினும் மணம் உண்டல்லவா? ரசிக்கத்தானே செய்வோம்; அது போல, பேசுபவரின் கருத்து பயன் தருமாயின் கேட்பவரின் கூட்டுறவு எத்தன்மையதாக இருப்பினும், அவர்கள் ஏற்றுக்கொள்வர். எனவே மேடைப் பேச்சுக்குச் கருத்துக்களைச் சேகரிப்பது, சிந்தனையில் விளையும்படிச் செய்வது மிகமிக முக்கியம். தூய்மையான நோக்கமும், தெளிவான அறிவும், கொள்கை வெல்லும் என்ற நம்பிக்கையும் இருக்கு. மானால், தட்டுத் தடுமாறி பேசும் பேச்சு நாளா வட்டத்தில் முழக்கமாகித் தீரும்.

கதம்பம், மலர் குறைவாகவும் தழை அதிகமாகவும் இருப்பின் மாதர் கொள்ளார். அதுபோலவே பேச்சுப் கருத்து அங்கொன்றும் இங்கொன்றுமாகி, சுவைக்குத வாதன அதிகமாக இருப்பின் எவரும் கொள்ளார். எனவே, கருத்து மிகமிக முக்கியம்; நடை வானவில் அதிக நேரம் அழகளிக்காது. நீதியை நிலைநாட்ட, நேர்மையை வலியுறுத்த, நாட்டிற்கேற்ற திட்டங்களை எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளைக் களைய, சிறுமைகளைச் சீரழிவு களைப் போக்க ஆர்வம் தோன்ற வேண்டும். அந்த ஆர்வம் ஏற்படுத்தும் சிந்தனையிலே பூத்திடும் நல்ல கருத்துக்களை அழகுறத் தொடுத்து அளிப்பதே மேடைப் பேச்சு.