பக்கம்:அண்ணா காவியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அண்ணா காவியம்


“வசவாளர் வாழ்க” வெனப் பெருந்தன் மைக்கோர்
வரையறுத்த இரக்ககுணச் சுரங்கம் அண்ணா,

நெசவாளர் துயர்துடைக்கத், தேங்கி நின்ற
நிகரற்ற கைத்தறியின் துணிகள் விற்றும்,

பிசகாமல் கீழ்க்கடலின் கரையைத் தாக்கும்
பெரும்புயலின் சேதத்துக் கீடு தந்தும்,

நசியாமல் தியாகியரின் குடும்பத் தார்க்கு
நல்வாழ்வு நல்கிவந்தும் மனங்க வர்ந்தார்.




பெரியாரின் பேரெதிர்ப்பைச் சமாளித் துத்தான்
பெருமையுடன் பதினய்வர் உள்ளே சென்றார்!

பெரியார்மேல் சுடுசொற்கள் வீசி விட்டுப்
பெரியவராம் நேருபிரான் சென்னை வந்தார்!

"பெரியாரைத் தானே?" என் றில்லை அண்ணா;
"பிடிகருப்புக் கொடி!" எனவே ஆணை யிட்டார்!

பெரிமன அரசினரோ அனைவ ரையும்
பிடித்தடைத்தார் சிறைக்குள்ளே! ஆயின் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/120&oldid=1520822" இலிருந்து மீள்விக்கப்பட்டது