பக்கம்:அண்ணா காவியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உவமைக் கவிஞர் சுரதா

சடையப்ப வள்ளலுக்குப் பக்கத்திலே இருந்த கம்பனும் பாடியிருக்கிறான். அக்பரின் பக்கத்திலே இருந்த அபுல் காசனும் பாடியிருக்கிறான். பயந்து பாடினானா? பாராட்ட வேண்டும் என்று பாடினானா? ஏதாவது பெறலாம் என்பதற்காகப் பாடியிருக்கலாம்!

ஆனால், அண்ணா காலமான பிறகு, கவிஞர் கருணானந்தம் அவர்கள் இந்தக் காவியத்தைப் பாடியிருக்கிறார்கள். எதையும் கேட்காமலே-எதிர்பார்க்காமலே - பாடியிருக்கிறார்கள். கம்பன் பாடியதை விட, அபுல்காசன் பாடியதை விட, மிகச் சிறந்த முறையில் படம் பிடித்துக் காட்டி, இந்தக் காவியத்தைப் பாடியிருக்கிறார் கவிஞர் கருணானந்தம். -

ஒர் அரசியல் தலைவரைப் பற்றி, நான் அறிந்தவரை யில், மற்ற யாரும் இப்படிப் பாடியதாகத் தெரியவில்லை!

யாராவது வள்ளலைப் பற்றிப் பாடினார் என்றால் அதில் ஆசை அடங்கியிருக்கிறது என்று பொருள்; ஏதாவது கிடைப்பதற்கும் வழி உண்டு!

அண்ணாவோ சிந்தனையில் வள்ளலாக இருந்தாரே தவிரச் செல்வத்தில் வள்ளலாக வாழ்ந்தவர் இல்லை! அவர் ஒரு சாதாரண ஏழைக் குடிமகன். அவர் இப்போது உயிரோடும் இல்லை. எனவே அவரைப் பற்றிக் கவிஞர் பாடியிருப்பதில் எந்த ஆசையும் அடங்கியிருக்கவில்லை!

நான் கழித்துக் கூட்டிப் பெருக்கிச் சரியாகவே சொல் கிறேன்:.

இந்தத் தலைமுறையிலே மிகச் சிறந்த கவிஞனாக - மிகச் சிறந்த காப்பியத்தைச் செய்திருக்கிறார் என்பத னாலே-தனித்த முறையிலே இவரைப் பாராட்டுகிறேன்!

என் மாவட்டத்தைச் சேர்ந்த (தஞ்சை) ஒரு கவிஞன் என் வயதை உடைய ஒரு கவிஞன்-என் கண்ணுக்கு எதிரிலே மிகச் சிறந்த ஒரு காவியம் செய்திருக்கிறார் என்பதாலே நான் மிகமிக மகிழ்ச்சி அடைகிறேன். மிகமிகப் பாராட்டுகிறேன்.

கவிஞர் கருணானந்தம் அவர்கள் மிக நீண்ட காலம் வாழ வேண்டும்; மிகப் பல நூல்களைப் படைக்க வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/13&oldid=1078001" இலிருந்து மீள்விக்கப்பட்டது