பக்கம்:அண்ணா காவியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மீண்டும் இந்தித் தீ
139

பிற்காலம் முதலமைச்சாய் வருவ தற்குப்
பேறுபெற்றார் என்பதெல்லாம் அறிந்து தானோ

கற்கால மனிதரைப்போல் நடந்து கொண்ட
'கனவா'னும் கலைஞரையே கைது செய்து

நிற்காமல் காவலரின் அடைப்பு ஊர்திக்குள்
நெஞ்சுவலி மிகுந்திடவே ஏற்றிச் சென்று

முற்காலம் ஊமைதுரை, பிள்ளை, தாசை
மூடியபா ளயங்கோட்டைச் சிறையில் இட்டார்.




நெல்லையிலே நடந்தபெரும் பொதுக்கூட் டத்தில்
நெகிழ்ந்துருகும் நெஞ்சினராய்அண்ணா சொன்னார்:

"எல்லையிலே என்தம்பி அடைக்கப் பட்ட
இடமேநான் யாத்திரைசெல் புனித பூமி!"

சொல்லினிலே சுவையென்ன; உணர்ச்சி யென்ன!
சூடுபெற்றுத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டார்!

தொல்லை தர இந்திவரும் சூது தன்னைத்
தொலைத்திடவே முடிவெடுத்தார் அனைத்துக் கட்சி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/141&oldid=1079997" இலிருந்து மீள்விக்கப்பட்டது