பக்கம்:அண்ணா காவியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

அண்ணா காவியம்


காலையிலே பல்துலக்கக் கூட நேரம்
காணவில்லை; செய்திவந்து சேரச் சேர...

வேலையேதும் செய்யாமல், மயக்க முற்று,
வீழ்ந்துவிட்டார் படுக்கையிலே அண்ணா! பின்னர்

காலைமுதல் அங்கிருந்த கலைஞர் அண்ணா!
கழகத்தார் என்ன செய்வோம்: ஆட்சி யாளர்

வேலையன்றோ கொடுமையெல்லாம்? மாண வர்க்கு
வேண்டுகோள் விடுத்திடலாம்!" என்றார்: செய்தார்.




மதுவருந்தும் மந்திக்குத் தேளுங் கொட்டி
வலியெடுத்தால் வாளாஇ ருக்கா தன்றோ!

இதுதெரிந்தும் பக்தவத்சலத்தைப் போய்நாம்
ஏனிந்த அடக்குமுறை என்றா கேட்போம்?

பொது, விரிந்த மனப்போக்கால் தமிழ்கற்பித்த
புதுமையாளர் இலக்குவனார் பிடிக்கப் பட்டார்.

எதுபுரிந்தும் நிறைவுறாமல் இந்தி நோயின்
இரையாகக் கலைஞரையும் பிடித்துச் சென்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/140&oldid=1079991" இலிருந்து மீள்விக்கப்பட்டது