பக்கம்:அண்ணா காவியம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மீண்டும் இந்தித் தீ
137

இப்பாரே இதற்குமுன்னர் பார்த்தி ராத
இனஎழுச்சிப் போராட்டம்! நாடு முற்றும்

துப்பாக்கிப் பேரிரைச்சல்; துடித்துச் செத்தோர்;
தூள்தூளாய் அங்கங்கள் அறுத்துத் தந்தோர்:

அப்பாவிப் பொதுமக்கள் ஆவி நீத்தோர்;
அங்கிங்கெ னாதபடி எங்கும் ரத்தம்!

எப்போதும் இல்லாமல் மூன்று நாட்கள்
இருப்புவழி வண்டிகளே ஓட வில்லை!




திருப்பூரில், கோவையிலே, திருச்செங் கோட்டில்,
திருக்குமார பாளையத்தில், பொள்ளாச் சிக்குள்

துருப்புகளும் சுடுகின்றார்; சாவில் வீழ்ந்தோர்
தொகையொன்றும் தெரியவில்லை; அமளி எங்கும்!

நெருப்பிட்டார் புகைவண்டி, உந்து வண்டி!
நெற்றியிலே ஒழிகஇந்தி என்ற சொற்கள்

விருப்பமாக எழுதாமல் வண்டி ஒடா!
வெறிச்செயல்கள் கேட்டஅண்ணா எரிச்சல்
கொண்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/139&oldid=1079988" இலிருந்து மீள்விக்கப்பட்டது