பக்கம்:அண்ணா காவியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



விடைபெறு காதை
161


வெளிநாட்டிற் கெப்போதோ செல்ல நேர்ந்தால்,
விரைவாக மீள்கின்ற நாட்டுப் பற்றாம்!

எளிமையாகச் சொந்தவீடே இல்லா வண்ணம்
எழில்நகராம் சென்னையிலே நீண்ட காலம்

ஒளியுமிழாச் சிற்றறையில் நண்பர் சூழ
உறங்குவதும், தங்குவதும், விடுதி சென்றே

துளியுணவை அருந்துவதும், திரைப்ப டங்கள்
சோர்வின்றிக் காணுவதும் வழக்க மாகும்!




தாய்நாட்டுக் குரியபெயர் மாற்றஞ் செய்தும்,
தலைநகரில் உரிமையுடன் சிலைகள் வைத்தும்,

ஒய்வேயில் லாதுநம துயர்விற் காக
உழைப்பெல்லாம் நல்கிவந்தும், ஏழை வாழ

ஆய்வுரைகள் அளித்ததுடன், திட்டம் தீட்டி,
அருமையான தமிழ்மக்கள் இதயம் வீற்றும்,

"போய்வருவேன்!" என்றுரைத்தால் அண்ண னுக்குப்
போகவிடை தருவாரா சென்னை மக்கள்?

அ. கா-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/163&oldid=1080235" இலிருந்து மீள்விக்கப்பட்டது