பக்கம்:அண்ணா காவியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



விடைபெறு காதை
163

வங்கத்துக் கடற்கரையில் கிழக்குத் திக்கில்
வளரஎழும் இளங்கதிரைச் சின்ன மாக்கிச்-

சிங்கத்தின் கம்பீரம், கர்ச்சிக்கின்ற
சிறப்பெல்லாம் தலைவனுக்குப் பண்பாய் ஆக்கித்=

தங்கத்தைப் புடம்போடத் தணலில் வைக்கும்
தன்மையினை நன்மையாக்கும் எங்கள் அண்ணன்

அங்கத்தைச் சந்தனத்துப் பேழை தன்னில்
அழகுகுன்றா தெழிலுடனே அடக்கம் செய்தார்!




இவ்வரிய சிந்தனையைக் கலைஞர் தந்தார்!
எடுத்தாள முன்வந்த அன்னா ருக்குச்

செவ்விதான முன்னறிவு நுணுக்கந் தானே?
சீருடனே அண்ணாவின் சதுக்கம் இன்று

எவ்வெவரும் சென்னைவரின் காண வேண்டும்
இடங்களிலே தலையாய தாய்வி ளங்கும்!

ஒவ்வாத நாத்திகரும் அமைதி நாடும்
ஒப்பற்ற திருவிடமாய் அமைந்தார் அண்ணா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/165&oldid=1080246" இலிருந்து மீள்விக்கப்பட்டது