பக்கம்:அண்ணா காவியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணா காவியம்

30

வரலாற்றுச் சிறப்புக் கொண்ட
மாநகர் எனினும், இஃதைத்

திறல்வாய்ந்த செங்கற் பட்டின்
திருத்தலை நகராய் மாற்ற

முரணானார் முன்னாள் ஆண்டோர்!
முதல்வராய் வந்த பின்னர்

சரளமாய் அதனைச் செய்து
சரித்திரம் படைத்தார் அண்ணா!



நொந்து கிடந்தநம் சொந்தச் சகோதரர்
வெந்துயர் போக்குவர் என்றிருந்தோம்-அவர்

வந்த சுதந்திரம் தந்த சுகங்களைச்
சொந்த நலன்களாய் எண்ணிவிட்டார்-பெரும்

இந்தியக் கண்டத்தில் தென்திசை என்ற நம்
முந்திய நாட்டினைத் தான்மறந்தார்-யாரும்

விந்தியத் தப்புறம் சிந்தை திருப்பியே
விந்தை வளர்ச்சிகள் தாம் புரிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/32&oldid=1078580" இலிருந்து மீள்விக்கப்பட்டது