பக்கம்:அண்ணா காவியம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நகரம்


பண்டைநாள், சமண பெளத்தப்

பள்ளிகள் தெருக்கள் தோறும்

உண்டென்பர்! 'நலந்தா' வாழ்ந்த

உயர்கலைக் கழகத் திற்கே

தொண்டாற்ற ஆசான் மார்கள்

தொடர்ந்ததும் இங்கி ருந்தே!

கண்டிதைப் புகழ்ந்து ரைத்தான்

காஞ்சிக்கு வந்த சீனன்!



சைவர்க்கும் வைண வர்க்கும்

சார்பான தலமாம் இங்கே...

தெய்வம் ஏ கம்ப நாதர்,

சீர் தாய் காமாட்சி யம்மை,

கைலாய நாதர் தொன்மைக்

கற்கோயில் வரத ராசர்

உய்வழி நாடிச் செல்வார்

ஓய்விலா துலவுங் காஞ்சி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/31&oldid=1078576" இலிருந்து மீள்விக்கப்பட்டது