பக்கம்:அண்ணா காவியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மணம்புனை காதை
45

படிப்போரே! அண்ணாவின் பாங்கு தன்னைப்
பற்றிநின்று பின்தொடர்க! அந்த நாளில்,

இடிப்பாரும், உரைப்பாரும் தூண்டு கோலாய்
இருப்பாரும் யாருமில்லா நிலையில், அன்னார்,

துடிப்போடு, கிடைத்ததெலாம் பயின்ற தோடு,
துளியேனும் அயர்வின்றி எடுத்த நூலை

முடிப்பாராம்! அவர்தொடாத பனுவல் ஏதும்
முழுமையுற்ற தில்லையெனில் உணர்ந்து கொள்க!



பெற்றோர்கள் கடன்பட்டும், உடல் வருந்தப்
பெருந்துன்பம் மேற்கொண்டும், பசியால் நொந்தும்,

சற்றேனும் மனத்துயரம் வெளிக்காட் டாமல்
தம்மக்கள் மேற்கல்வி அடைவ தற்கும்...

கற்ற பின்னர் மூப்படைந்த தாயார் தந்தை
காப்பாற்றுங் கடமையினை ஆற்று தற்கும்...

பெற்றுவரும் பட்டத்தைப் பெரிதாய் நம்பிப்
பிள்ளைகளை அனுப்புகின்றார் கல்லூ ரிக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/47&oldid=1078665" இலிருந்து மீள்விக்கப்பட்டது