பக்கம்:அண்ணா காவியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இந்திப் பரணி


துவளாது பொதுப்பணியே தொடர்ந்தார் அண்ணா: :தூயநறுந் தாய்மொழியாம் தமிழைக் கொல்லத்

தவளைமொழி இந்தியினைச் சட்டத் தாலே
தமிழகத்தில் நுழைப்பதற்கோர் ஆட்சி மாற்றம்

பவளமொழி வாணரிடை நேர்ந்த தாலே
பாங்குடனே இராசாசி வந்து சேர்ந்தார்;

கவலையுற்ற பெரியாரும் தமிழர் மேன்மை
காப்பதற்குத் துணிந்தெழுந்தார்; குரல்கொடுத்தார்:



கொண்டிருந்த கொள்கையினால் வேறு பட்டோர்,
குறிக்கோளாய்த் தமிழ்காத்தல் ஒன்றே நாடிப்,

பண்டிருந்த மேண்மையினை நிலைநாட் டத்தாம்
பாசறைகள் காண்பதற்கும் போராட் டத்தில்

மண்டிவரும் அடக்குமுறை ஏற்ப தற்கும்,
மறைமலையார் போற்புலவர் திரண்டு விட்டார்!

பெண்டிருமே முன்வந்து, பெரும் எதிர்ப்பைப்
பேராற்றல் துலங்கிடவே காட்டி நின்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/57&oldid=1078725" இலிருந்து மீள்விக்கப்பட்டது